தலைநகர் டெல்லியில் நடந்த கொடூரம்., அரங்கேறிய படுகொலையின் சிசிடிவி காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இளம்பெண் ஒருவர் தனது குழந்தை முன்பே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பி சென்ற குற்றவாளி தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது,

"சாகர் காவல் நிலையத்திற்கு பகல் 2 மணி அளவில் பிசிஆர் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது, பெண்ணொருவர் சாலை நடுவே கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்து கிடந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. 

இதனையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணை துரத்தி வந்து, அவரின் குழந்தைகள் முன்பே கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. 

இது குறித்து விசாரணை மேற்கொண்டதில்,  குற்றவாளி அந்தப் பெண்ணின் வீட்டின் அருகில் இருந்தவர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. கொலை சம்பவத்திற்கான காரணம் தெரியப்படவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi young lady murder cctv


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->