ஆளுநர் விவகாரம் | தெருவுக்கு வந்த முதலமைச்சர்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் ஆளுநரை கண்டித்து, தனது கட்சியினருடன் டெல்லி முதலமைச்சர் தெருவில் இறங்கி, ஆளுநர் இல்லம் நோக்கி பேரணியாக சென்றுள்ளார்.

பள்ளி ஆசிரியர்கள் பின்லாந்து சென்று பயிற்சி பெறும் டெல்லி அரசின் முடிவில், ஆளுநர் தலையீடு செய்வதை எதிர்த்தும், கண்டித்தும், இன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆளுநர் இல்லம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

டெல்லியின் அரசுப்பள்ளி உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் முயற்சியில் அரவிந்த கெஜ்ரிவால் இறங்கியுள்ளார்.

அதன் உருப்படியாக டெல்லி அரசுப்பள்ளி ஆசிரியர்களை சிறப்பு பயிற்சிக்காக பின்லாந்து நாட்டுக்கு அனுப்ப டெல்லி அரசு திட்டமிட்டிருந்தது. 

ஆனால், டெல்லி அரசின் இந்த முடிவில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தகாக ஆளும் ஆம் ஆத்மீ கட்சியும், முதலாவரும் குற்றசாட்டுகின்றனர்.

இந்நிலையில், டெல்லி அரசின் முடிவில் ஆளுநர் தலையிடுவதற்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில், ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். 

இந்த பேரணியில் “துணைநிலை ஆளுநரே.., பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக பின்லாந்து செல்ல அனுமதியுங்கள்” என்ற பதாகைகளை கைகளில் ஏந்திய படி பேரணியில் எம்எல்ஏக்கள் கோஷமிட்டு கொண்டே சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delli cm aravind protest 2023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->