டெல்லி : சட்ட வரம்பை மீறிய கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதித்ததற்கு காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர், திருமணத்திற்கு பிறகு கர்ப்பம் ஆனார். அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு 'ஸ்கேன்' பரிசோதனை செய்து பார்த்ததில், வயிற்றில் உள்ள கருக்குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதையறிந்த குடும்பத்தினர்கள், இப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து, அது காலமெல்லாம் அவதிபட்டு மருத்துவ சிகிச்சையை சார்ந்து வாழ்வது மிகக்கொடுமையானது என்று நினைத்து, அந்த கருவைக் கலைப்பதற்காக டெல்லி குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு சென்றார். 

பொதுவாக, மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள்தான் கருக்கலைப்பு செய்ய முடியும். ஆனால், அந்த பெண்ணுடைய கர்ப்பம் 24 வாரங்களைக் கடந்து விட்டதால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் கருக்கலைப்பு செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அதன் பின்னர் அந்த பெண், கருக்கலைப்புக்கு அனுமதி கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "தனது கருக்குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது, கடந்த நவம்பர் மாதம் 12-ந் தேதிதான் தெரியவந்தது. அதனால், தான் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பிரதிபா எம்.சிங், வழக்குத் தொடர்ந்துள்ள அந்த பெண், தனது 33 வார கருவைக்கலைத்துக்கொள்ள அனுமதி அளித்து  தீர்ப்பு வழங்கினார்.

மேலும், அந்தப் பெண் டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையிலோ அல்லது குரு தேக் பகதூர் மருத்துவமனையிலோ அல்லது சட்டப்படி அனுமதி பெற்றுள்ள பிற மருத்துவமனையிலோ கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்று நீதிபதி தீர்பளித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delli high court permission to 33 weeks embryo dissolve


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->