மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் - வழுக்கை தலை உடையவர்கள் சங்கம் கோரிக்கை.!
Demand for Rs 6000 monthly pension for bald heads
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள தங்கலபள்ளி பகுதியில் வழுக்கைத் தலை உடையவர்கள் சேர்ந்து புதிய சங்கம் அமைத்துள்ளனர். மேலும் இந்த குழுவின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு 50 வயதுடைய பாலையா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பாலையா, வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாநில முதல் அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் சமூகத்தில் அவமானத்தையும் பல பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள். மக்களின் எங்களைப் பற்றிய கருத்துக்கள் எங்களை காயப்படுத்துகின்றன. மேலும் அவர்கள் சிரித்து கேலி செய்கிறார்கள். தற்பொழுதெல்லாம் சிறு வயதிலேயே பலருக்கும் வழுக்கை ஏற்படுகிறது.
மேலும் திருமணம் நடப்பதும் கடினமாக உள்ளது. இதனால் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு வழுக்கை தலை இருப்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர்.
இந்நிலையில் முதியவர்கள், விதவைகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் பிறருக்கு அரசு ஓய்வூதியம் வழங்கி வருவதால், தங்களது கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து வழுக்கைத் தலை உடையவர்களுக்கு மாதம் ரூபாய் 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Demand for Rs 6000 monthly pension for bald heads