பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடாவின் மகன் எச்.டி ரேவண்ணா கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாக உள்ளார். தற்போது மக்களவைத் தேர்தலில் ஹாசன் நாடாளுமன்ற தொகுதியில் களம் காண்கிறார்.

ஏற்கனவே ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் ரேவண்ணா மீது ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் கடந்த வாரம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது எச்டி ரேவண்ணா பாலியல் அத்துமீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனது தாயை காணவில்லை என்று மகன் ரமணா மீதும் அவரது உதவியாளர் மீதும் காவல்துறையில் புகார் மனு அளித்தார். காவல்துறை ரேவண்ணா மீதும் அவருடைய உதவி உதவியாளர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எச்.டி ரேவண்ணா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இதனை அடுத்து பெங்களூரில் தேவகவுடா இல்லத்தில் வைத்து ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர். ரேவண்ணா கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநில மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காணாமல் போன பெண்மணியை ரேவண்ணா  உதவியாளர் ராஜசேகருக்கு சொந்தமான பண்ணை வீட்டிலிருந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் மீட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deve Gowda son Revanna arrested in case of abducting a woman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->