பக்தர்கள் அதிர்ச்சி! திருப்பதியில் 20 முறை தரிசனம் செய்த பக்தர் கைது! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 முறை தரிசனம் செய்த பக்தர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்தியாவில் அதிக பக்தர்கள் செல்லும் திருத்தலங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒன்றாகும். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இங்கு சிறப்பு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீதர் என்ற பக்தர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்ததாக கூறப்படுகிறது. சுப்ரபாத சேவையின் ஆதார் அட்டை மற்றும் சுப்ரபாத சேவை டிக்கெட் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஆதார் அட்டையில் உள்ள முகமும் ஸ்ரீதரின் முகமும் வேறு வேறாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் திருமலை திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளிடம் ஸ்ரீதரை ஒப்படைத்தனர். பின்னர் அதிகாரிகள் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஸ்ரீதர் என்பவர் போலி ஆதார் கார்டுகளை பயன்படுத்தி குலுக்கல் முறையில் தேவையான சுப்ரபாத சேவை டிக்கெட்டை 400 மேல் முன்பதிவு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 20 முறை டிக்கெட்களை வாங்கி சாமி தரிசனம் செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஸ்ரீதரை பறக்கும் படையினர் திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிக்கெட் மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீதர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotee arrested for 20 times darshan at Tirupati Eyumalayan temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->