திருப்பதி: 21,100 கிலோ தலைமுடி காணிக்கை ஏலம்.. எத்தனை கோடி வசூல் தெரியுமா? - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 21ஆயிரத்து 100 கிலோ தலைமுடி 48 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். 

நாட்டின் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் லட்சக்கணக்கான பக்தர்களில் பெரும்பாலானோர் தங்கள் முடியை காணிக்கையாக வழங்குவது வழக்கம். இதில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 21ஆயிரத்து 100 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில், 48 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees hair auctioned at Tirupati for Rs 48 crore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->