காங். ஆட்சி அமைந்ததும் மேகத்தாதுவில் அணை.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.!!
DKSivakumar assured Meghadatu dam build in centre Congress govt
நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் உள்ள நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்க உள்ளது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டிலும் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல் அமைச்சரும் நீர்வளத் துறை அமைச்சரமான டி கே சிவக்குமார் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியா அவர் மேகதாது அணை கட்டுவதற்காகவே நான் நீர் பாசன துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றி சரித்திரம் படைப்பதே என்னுடைய கனவு என உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாக விளங்கும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டு தீர்வோம் என காங்கிரஸ் தலைவர் அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில் கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்த அறிவிப்பு திமுக கூட்டணிக்கு பெறும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கர்நாடக மாநில அமைச்சரின் இந்த கருத்துக்கு என்ன பதில் அளிப்பார் என சமூக வலைதளங்களில் இணையதள வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
DKSivakumar assured Meghadatu dam build in centre Congress govt