வக்பு சட்ட மசோதா - உச்ச நீதிமன்றத்தில் இன்று திமுக வழக்கு..!!
dmk case against waqf law
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் வக்பு சட்ட திருத்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
அந்த வகையில், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு தொடரவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:-

"வக்பு வாரிய திருத்த சட்டத்தை நள்ளிரவு இரண்டு மணிக்கு மத்திய பாஜக அரசு அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி இருக்கிறார்கள். அதன் படி வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு மக்களவையில் ஆ.ராசா எம்.பி.யும், மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி.யும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
ஆனால், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை ஒரு நிமிடம் மட்டுமே மாநிலங்களவையில் பேசினார். அதுவும் அ.தி.மு.க. எதிர்க்கிறதா?, ஆதரிக்கிறதா? என்று கூட அவர் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறேன். நாளை நம்முடைய துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மூலம் வழக்கு தொடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
dmk case against waqf law