நீட் விவகாரத்தில் திமுக அரசு நாடகமாடி வருகிறது - அமைச்சர் எல். முருகன்..!
minister l murugan speech about neet
இன்று ஊட்டியில் உள்ள முகாம் அலுவகத்தில் பா.ஜ.க. மண்டல தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:-
"தமிழக மக்களை திசை திருப்புவதில் தி.மு.க அரசு குறியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும் இணைந்துதான் நீட் தேர்வை கொண்டு வந்தனர். அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த ஆ.ராசா முதல் டி.ஆர்.பாலு வரை யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை.

இன்றைக்கு நீட்டை எதிர்ப்பதாகச் சொல்லி நாடகமாடி வருகின்றனர். நீட் தேர்வுக்கு மாணவர்களை நாடு முழுவதும் தற்போது தயார் செய்து வருகிறோம். அரசு பள்ளிகளில் பயின்று வரும் பழங்குடியின மற்றும் பட்டியல் சமுதாய மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்த சமயத்தில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் என்ற பெயரில் போலியான நாடகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். டாஸ்மாக்கில் நடைபெற்றிருக்கும் மெகா முறைகேட்டை திசை திருப்புவதற்கான செயலாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister l murugan speech about neet