நீட் தேர்வு வசதி படைத்தவர்களுக்கு சாதகமாக உள்ளது - மு.க ஸ்டாலின்.!!
cm mk stalin speech about neet
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது இது தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:-
நீட் தேர்வு, பயிற்சி மையங்களின் நன்மைக்காகவும், சிலரின் சுயநலனுக்காகவும் கொண்டுவரப்பட்டது. வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளது. பல தரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது.

13.09.2021-ல் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை முன்மொழிந்தேன். அதைத் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் அரசியல் செய்தார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆளுநர், பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
08.02.2022-ல் இரண்டாவது முறையாக நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றி அனுப்பப்பட்டது. நீட் விலக்கு போராட்டத்தில் அடுத்த கட்டமாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு, மருத்துவத் துறையில் நாட்டுக்கே முன்னோடியாக விளங்கி வருகிறது. நீட் தேர்வு விலக்கு அளிக்க முடியாத தேர்வு அல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. சட்டப் போராட்டத்தை தொய்வின்றி நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கத்தான் அனைத்து கட்சி கூட்டம். நீட் தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் போராட்டம் எந்த வகையிலும் முடிவுக்கு வரவில்லை" என்றுத் தெரிவித்தார்.
English Summary
cm mk stalin speech about neet