இந்தி திணிப்பு எதிர்ப்பு - ஆட்டுக்குட்டியுடன் போராட்டம் நடத்திய திமுக.!
dmk protest with goat in pollachi
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ரெயில்நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இந்தியை எதிர்த்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தும் பொள்ளாச்சியில் ஆட்டுக்குட்டியை ஊர்வலமாக அழைத்து வந்து தி.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் இந்தியை ஏற்க மாட்டோம், இந்தி ஒழிக, கெட்-அவுட் அமித்ஷா, தமிழ்வாழ்க என்று கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்டுக்குட்டிக்கு வாழைப்பழம் வழங்கி போராட்டம் நடத்தினர்.
தி.மு.க.வினரின் இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கிய இந்தப் போராட்டத்தில் நகரசபை துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.॰
English Summary
dmk protest with goat in pollachi