தெலுங்கானா தேர்தல் எதிரொலி: முக்கிய கட்சிக்கு ஆதரவு அளிக்கும் தி.மு.க!
dmk supports congress Telangana assembly election
வருகின்ற 30 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பி.ஆர்.எஸ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தி.மு.க தலைமை கழகம் தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, வருகின்ற 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் இணைந்து பணியாற்றி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க ஆதரவு அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
English Summary
dmk supports congress Telangana assembly election