பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறை வசதிகள் உள்ளதா?...மத்திய அரசு பரபரப்பு தகவல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் நிர்வாகியும், சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர், நாடு முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அந்த வகையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பிரமாண பத்திரத்தில், நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்காக 16 லட்சம் கழிவறைகள் மற்றும் மாணவிகளுக்காக 17.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2.5 லட்சம் மாணவர் கழிவறைகளும், 2.9 லட்சம் மாணவிகள் கழிவறைகளும் உள்ளது.

பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறை வசதிகள் பின்வருமாறு :

மேற்கு வங்காளத்தில் 99.9 சதவீதம்
தமிழ்நாட்டில் 99.7 சதவீதம்
கேரளா, சத்தீஷ்காரில் 99.6 சதவீதம்
கர்நாடகாவில் 98.7 சதவீதம்
குஜராத், பஞ்சாப்  99.5 சதவீதம்
பீகாரில் 98.5 சதவீதம்
உத்தரபிரதேசத்தில் 98.8 சதவீதம்
மத்திய பிரதேசத்தில் 98.6 சதவீதம் என நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 98 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு என தனி கழிவறை வசதிகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do schools have separate toilet facilities for girls the central government sensational information release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->