நீங்கள் ரயில் பயண விரும்பியா?...இதோ உல்லாசமாக படுக்கை வசதியுடன் அறிமுகமாகும் வந்தே பாரத் ரயில்!
Do you want to travel by train Heres the Vande Bharat train that will be introduced with a comfortable bed
பல்வேறு வழித்தடங்களில் நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ரயில்களில், முழுக்க முழுக்க ஏசி வசதிகளுடன் கூடிய இருக்கை வசதி மட்டுமே உள்ளதால், நெடுந்தொலைவுக்கு இந்த ரயில்களை இயக்கும் விதமாக, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த பி.இ.எம்.எல். நிறுவனம் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.
இந்த ரயிலை இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்க அனைத்து நடவடிக்கையும் ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் மாதிரி வடிவமாக வைக்கப்பட்டுள்ள தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஸ்லீப்பர் பெட்டியில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகள் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், வரும் நவம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என்று ஐ.சி.எப். நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் சோதனைகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Do you want to travel by train Heres the Vande Bharat train that will be introduced with a comfortable bed