கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்று ஓடையில் சிக்கிக்கொண்ட மருத்துவர்.!
doctor got stuck in the river by going to the car with the help of Google map
கூகுள் மேப் பார்த்து கார் ஒட்டி செல்லும் போது, தவறுதலாக நீர் ஓடைக்குள் காரை ஒட்டிய சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது .
கேரள மாநிலம் திரூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அவர் தனது குடும்பத்துடன் புதுக்குளம் நோக்கி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளார். ஒரு குழந்தை உட்பட காருக்குள் மொத்தம் 4 பேர் இருந்துள்ளனர்.
பாலசித்ரா மலைபாதை வழியாக கூகுள் மேப் வழிகாட்டுதலின் பேரில் இந்த பயணம் தொடர்ந்துள்ளது. இரவுநேரம் என்பதால் பாதை சரியாக தெரியவில்லை என தெரிகிறது.
அப்போது பாதை முடியும் இடத்தில் ஒரு ஓடை இருந்துள்ளது. இருட்டாக இருந்ததால், நீர் ஓடை இருப்பது கடைசி நேரத்தில் தெரிந்த காரணத்தால், சுதாரித்து பிரேக் போடுவதற்குள் கார் நேராக, ஓடையில் இறங்கிவிட்டது.
இதில் காரில் இருந்த அனைவரும் அலறியுள்ளனர். பின்னர் உடனடியாக சேற்றில் சிக்கிய காரில் காரில் இருந்து, மருத்துவர் கிழே இறங்கி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தனது குழந்தை உட்பட அனைவரையும் காரில் இருந்து வெளியேற்றியுள்ளார். பின்னர் வேறு வாகனம் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டனர்.
English Summary
doctor got stuck in the river by going to the car with the help of Google map