பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்திய வம்சாவளி டாக்டர்.. 12 ஆண்டுகள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


ஸ்காட்லாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  கிருஷ்ணா சிங் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 72 ஆகிறது. இவர் வடக்கு லனர்க்‌ஷைரில் பொது நல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 1983-2018ஆம் ஆண்டு வரையில் தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்த பெண் நோயாளிகளிடம் தேவையற்ற பரிசோதனைகளை செய்தல், ஆபாசமாக பேசுதல், ஆபாசமாக நடந்து கொள்ளுதல் போன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை உறுதி செய்யப்பட்டதை அடுத்து 12 ஆண்டுகள் சிறை தண்டனையை கிளாஸ்கோ நீதிமன்றம் விதித்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த டாக்டர் கிருஷ்ணா சிங் நோயாளிகள் தவறான தகவல்களை அளித்து விட்டதாகவும், இந்தியாவில் தனக்கு மருத்துவ பயிற்சியில் கற்றுக்கொடுத்த பரிசோதனைகளை மட்டுமே மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த கிளாஸ்கோ நீதிமன்றம் மருத்துவ தொழிலில் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி விட்டதாகவும், பெண் நோயாளிகளின் நம்பிக்கையை சிதைத்து விட்டதாகவும் கூறி அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor of Indian descent sentenced to 12 years in prison for sexually harassing female patients


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->