சிகிச்சைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. மருத்துவருக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் சிகிச்சைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் காது வலி காரணமாக வார்க்கலா பகுதியில் உள்ள டாக்டர் சுரேஷ்குமார் என்பவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பொழுது டாக்டர் சுரேஷ்குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் வார்க்கலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையறிந்த மருத்துவர் சுரேஷ் குமார் தலைமறைவானார். இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான மருத்துவர் சுரேஷ் குமாரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor sexually harassing 17 year old girl in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->