250 ட்ரோன்கள் மூலம் விண்ணில் காட்டப்பட்ட நேதாஜியின் உருவப்படம்..! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே 28 அடி உயரம் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிலையை  திறந்துவைத்தார். சிலை திறப்பையொட்டி, நேற்று முதல் 11-ந்தேதி வரை நேதாஜியின் வாழ்க்கை குறித்த டிரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் நடத்தப்படுகிறது. 

அதன்மூலம், நேற்று இரவு 8 மணிக்கு பிரமாண்ட டிரோன் கண்காட்சி நடைபெற்றதில் நேதாஜியின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வானத்தில் டிரோன்கள் பறந்து ஒளிர செய்தன. 

இந்த ட்ரோனில் நேதாஜியின் உருவப்படம் மற்றும் நேதாஜியின் பிரமாண்ட சிலை, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட 8 வெவ்வேறு வடிவங்களை டிரோன்களால் வானில் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு மொத்தம் 250 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மக்கள் தங்களது செல்போன்களில் ஆர்வமுடன் படம் பிடித்தனர். இதையடுத்து, நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைஞர்கள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சியும் நடந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drons fly sky nethaji portite disply


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->