தண்டவாளத்தை சாலை என்று நினைத்து கார் ஓட்டிய நபர் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தண்டவாளத்தை சாலை என்று நினைத்து கார் ஓ​ட்டிய நபர் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம், அஞ்சரகண்டி என்ற ஊரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் மதுபோதையில், தாழேசோவா என்ற பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கார் ஓட்டிச்சென்றார். அப்போது கார் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. 

இதையடுத்து ஜெயப்பிரகாஷ் காரை எடுக்க முடியாமல் திணறினார். இதைப்பார்த்து பதறிபோன ரயில்வே பணியாளர் உடனடியாக போலீஸுக்கு தகவல் அளித்தார். அந்தத் தகவலின் படி போலீசார் உடனடியாக விரைந்து வந்து தண்டவாளத்தில் சிக்கியிருந்த காரை மீட்டனர். 

அதன் பின்னர், ரெயில்வே போலீசார் போதையில் கார் ஓட்டி சென்ற ஜெயப்பிரகாஷை கைது செய்தனர். அவர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, ரயில்வே விதிமுறையை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர், போதையில் தண்டவாளத்தை, சாலை என்று நினைத்து காரை ஓட்டிச்சென்றதாக தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்து அவரது காரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் கண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drunk man drive car in railway trake in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->