ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு..!
Earth Quack In Rajastan
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம்,பிகானேரில் இருந்து வடகிழக்கே 236 கிமீ தொலைவில் இன்று காலை 2.01 மணி அளவில் மிதமான் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது புவிமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இது வரை எந்த தகவலும் வெளிவரலவில்லை. நேற்று முன் தினம் உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் ரிக்டர் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.