அருணாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. தேசிய நில அதிர்வு மையம் தகவல்.!
Earthquake in Arunachal Pradesh
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாச்சல பிரதேச மாநிலம் தெற்கு சாங்லாங் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தெற்கு சாங்லாங் பகுதியில் இருந்து தெற்கே 222 கிலோ மீட்டர் தொலைவில் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவிலிருந்து 57 கிலோ மீட்டர் வட மேற்கில் இன்று காலை 7.46 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Arunachal Pradesh