ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு.!
earthquake in jammu kashmeer
ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு.!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு கிழக்கே யூனியன் பிரதேசம் கத்ரா பகுதியை மையமாக வைத்து இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. விடியற்காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர்.
வடமாநிலங்களில் நேற்றிரவு முதல் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட வண்ணம் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக லடாக்கின் லே மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. வடமாநிலங்களில் ஏற்படும் தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
English Summary
earthquake in jammu kashmeer