மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 5.1ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 5.1ஆக பதிவு.!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் இருபது கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், இதுவரைக்கும் உயிர்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. அது தொடர்பான விபரங்களும் வெளிவரவில்லை. 

இதே போன்று, கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி அன்று உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்கக் கடலில் நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in manipur ukrul district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->