குஜராத்தில் 13800 பேரை காவு வாங்கிய நிலநடுக்கம்!....தற்போது 3.3 ரிக்டர் அளவு பதிவு! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியையு ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், குட்சா மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். மாவட்டத்தில் உள்ள  ரபர் நகரின் மேற்கே  12 கிலோமீட்டர் தொலைவு மையத்தில் இன்று நில அதிர்வு ஏற்பட்டது.

சரியாக இன்று காலை 10.05 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ள நிலையில்,  இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

முன்னதாக, குஜராத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது.  இந்த நிலநடுக்கத்தில் 13 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake that killed 13800 people in Gujarat currently 3.3 Richter


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->