தமிழ்நாட்டில் "போலி வாக்காளர்கள்".. அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்.!!
ECI direct tn chief election officer take action on fake voters
தமிழ்நாட்டில் பெரும்பாலான தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிக அளவில் காணப்படுவதாக தொடர்ந்து இங்கே தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்ற வண்ணம் உள்ளது.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அதிமுக சார்பில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் 23 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ள நிலையில் அங்கு நடைபெற இருக்கும் தேர்தல் எப்படி நியாயமானதாக இருக்கும் என கேள்வி எழுப்பி அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுபோன்று கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் சுமார் 11 புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது
English Summary
ECI direct tn chief election officer take action on fake voters