ED-யிடம் சிக்கிய ஜாபர் சாதிக்.. அதிரடியாக பாய்ந்த வழக்கு.. சுத்து போட்ட அதிகாரிகள்.!!
Ed case filed against jaffar Sadiq regards drugs smuggling
டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடத்தலில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் டெல்லி பாட்டியாலா நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் அவரை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை இனி விசாரிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Ed case filed against jaffar Sadiq regards drugs smuggling