மோடி வருவார் பின்னே..! அமலாக்கத்துறை வரும் முன்னே..! சந்திரசேகர ராவ் மகள் விமர்சனம்..!
ED was come to polling state before Modi Campaign
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் சட்டமன்ற உறுப்பினருமான கவிதாவை டெல்லியில் நடந்த மதுபான முறை கேட்டு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கவிதா பாஜகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது குறித்து பேசி அவர் "பாஜக எங்களை சிறைக் கம்பிகளுக்கு பின்னால் அடைக்க பார்க்கிறது. 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பாஜக தரம் தாழ்ந்த யுத்திகளை பயன்படுத்துகிறது. நாங்கள் மக்களுக்காக பணியாற்றுகிறோம்.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு நடைபெற்ற ஒன்பது மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டு அமைந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு முறைகேடான வழியில் அங்கெல்லாம் பாஜக ஆட்சி அமைக்கிறது.
இது குழந்தைகளுக்கு கூட தெரியும் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வருவதற்கு முன்பே அமலாக்கத்துறை வந்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த விடும். இதனை சாதகமாக பயன்படுத்தி பாஜக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கிறது" என சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
ED was come to polling state before Modi Campaign