நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை - பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜாபூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், "எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறாமல் மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம் போன்ற வேடங்களை அணிவிக்கக் கூடாது. இது தொடர்பான புகார்கள் ஏதேனும் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி விவேக் துபே பேசியதாவது, "பள்ளிகளில் நடைபெறும் பண்டிகைக்கால கொண்டாட்டங்களை தடை செய்யுமாறு கூறவில்லை. கடந்த காலங்களில் பெற்றோர் அனுமதியின்றி குழந்தைகளை இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுத்தியதாக புகார்கள் வந்துள்ளன. அதனை தவிர்க்கவே இந்த ஆண்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department order students not involved christmas celebration in madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->