பெண் மருத்துவர் கொலை வழக்கு - மருத்துவமனை முன்னாள் முதல்வருக்கு 8 நாட்கள் சிபிஐ காவல்.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே, பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதவல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் இடைநீக்கம் செய்துள்ளது. இந்த வழக்கு வழக்கு தொடர்பாக சிபிஐ மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட பலரிடம் விசாரணை நடத்தியதில் சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாக்குவதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

 

இது குறித்து சந்தீப் கோஷின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையத்தொடர்ந்து, சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில், சந்தீப் கோஷை அலிபூர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். 

அப்போது, மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. 10 நாட்கள் விசாரணைக் காவல் கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கில், கைதான சந்தீப் கோஷ் கூடுதல் செயலாளர் உள்பட மேலும் மூன்று பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight days cbi custody to sadeep gosh for woman doctor murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->