ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர் உள்பட 8 பயங்கரவாதிகள் கைது.!
eight terrorists arrested in jammu and kashmir
ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர் உள்பட 8 பயங்கரவாதிகள் கைது.!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் மாநில புலனாய்வு முகமை மற்றும் சி.ஐ.டி. அமைப்பினர் கடந்த முப்பது ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தோடா மாவட்டத்தில் எட்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாவது, "தப்பியோடிய பயங்கரவாதிகளில் சிலர் அரசு பணிகள் மற்றும் ஒப்பந்ததாரராக உள்ளனர். சிலர் தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிமன்றங்களில் கூட சிலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தண்டனையில் இருந்து தப்பித்து, இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த எட்டு பயங்கரவாதிகளும் அடில் பரூக் பரிடி, முகமது இக்பால் என்ற ஜாவித், முஜாகித் உசைன் என்ற நிசார் அகமது, இஷ்தியாக் அகமது, தாரிக் உசைன், அஜாஸ் அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் பரிடி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்திலும், இஷ்பாக் என்பவர் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
eight terrorists arrested in jammu and kashmir