ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்... எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு... !
One Nation One Election Bill Opposition parties oppose
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலயே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கே இந்த மசோதா எதிரானது என்று சமாஜ்வாடி எம்.பி கூறினார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையை, மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதுஇந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலயே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கே இந்த மசோதா எதிரானது என்று சமாஜ்வாடி எம்.பி கூறினார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
English Summary
One Nation One Election Bill Opposition parties oppose