தேர்தல் பத்திர நிதி.. "டாப் ரூ.100 கோடி க்ளப் லிஸ்ட்".. முதலிடம் யார் தெரியுமா!! - Seithipunal
Seithipunal


பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்திய தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டது. இந்த பட்டியலில் பாஜக 6060.5 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து திரிணாமுல காங்கிரஸ் 1609.5 கோடி ரூபாயும், காங்கிரஸ் கட்சி 1421.9 கோடி ரூபாயும், தெலுங்கானாவைச் சேர்ந்த பாரதி ராஷ்ட்ரிய சமிதி கட்சி 1614.7 கோடி ரூபாயும் விஜி ஜனதா தளம் கட்சி 725.5 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்று முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

6வது இடத்தை தமிழகத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்ற கழகம் ரூ.600 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக பெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கிய நிறுவனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் கடந்த சில ஆண்டுகளாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையிடம் சிக்கிய ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிகப்படியான நன்கொடையை வழங்கியுளளது. 

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி,

1) ஃபியூச்சர் கேம்மிங் - ரூ.1368 கோடி

2) மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராடெக் - ரூ.966 கோடி

3) குவிக் சப்ளை செயின் - ரூ. 410 கோடி 

4) வேதாந்தா - ரூ.401 கோடி

5) ஹால்டியா எனர்ஜி - ரூ.377 கோடி

6) யெசல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரி - ரூ.225 கோடி

7) வெஸ்டர்ன் யூ.பி பவர் - ரூ.220 கோடி

8) பாரத் ஏர்டெல் - ரூ198 கோடி

9) கெவேன்டர் புட்பார்க் - ரூ.195 கோடி

10) எம்.கே.ஜே என்டர்பிரைசஸ் - ரூ.192 கோடி

11) மதன்லால் லிமிடெட் - ரூ.186 கோடி

12) யசோதா சூப்பர் ஸ்பெசிபிக் ஹாஸ்பிடல் - ரூ.166 கோடி

13) உத்கல் அலுமினா இண்டஸ்ட்ரி - ரூ.145 கோடி

14) டி.எல்.எப் - ரூ.130 கோடி

15) ஜிண்டால் ஸ்டீல் & பவர் - ரூ.123 கோடி

16) பிஜி செர்க் கன்ஸ்ட்ரக்சன் டெக்‌ - ரூ.117 கோடி

17) தரிவால் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் - ரூ.115 கோடி

18) அவீஸ் ரேடிங் அண்ட் பைனான்ஸ் - ரூ.113 கோடி

19) டோரண்ட் பவர்‌ - ரூ.107 கோடி

20) பிர்லா கார்பன் இந்தியா - ரூ.105 கோடி

21) சென்னை கிரீன் வோட் - ரூ.105 கோடி

22) ரூம்ங்காட் சன்ஸ் - ரூ.100 கோடி நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளன. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election bond donors in rs100cr club top list


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->