தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்.... தேர்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம்....காரணம் என்ன?
Election should be postponed BJPs letter to Election Commission What is the reason
ஹரியாணா மாநிலத்தில் சட்ட பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 16-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, வரும் அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தொடர்ந்து 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மாநில பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் பாஜக மாநில தேர்தல் நிர்வாகக் குழு உறுப்பினர் வரீந்தர் கர்க் கூறுகையில், ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்குப் பதிவு நாளுக்கு முன்பும் பின்பும் தொடர் விடுமுறைகள் வருகின்றன.
தொடர் விடுமுறை காரணமாக, மக்கள் வெளி ஊர்களுக்கு சென்றுவிட வாய்ப்புள்ளதால், வாக்குப் பதிவு விகிதம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. மேலும், தேர்தலில் அதிக அளவில் வாக்குகள் பதிவாவதை உறுதிப்படுத்தும் வகையில், விடுமுறைகள் முடிந்தபிறகு சட்டப்பேரவைத் தோ்தலுக்கு புதிய தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
English Summary
Election should be postponed BJPs letter to Election Commission What is the reason