ஜூன் 25 : அரசியல் சாசனம் படுகொலை தினம் - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25ம் தேதியை, இனி ஒவ்வொரு ஆண்டும் அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாளாக அனுசரிக்க இருப்பதாக மத்திய அரசு அறித்துள்ளது. 

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பின்னால் உள்ள அரசியல்

கடந்த 1975 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 25ஆம் தேதி அப்போது பிரதமராக இருந்த காங்கிரஸின் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

இதன் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நாடு முழுவதும் பத்திரிகைகளின் குரல் முடக்கப்பட்டது.

அப்போதே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த ஜூன் 25ஆம் தேதியை இந்தியாவின் கருப்பு தினம் என்று குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் இந்திய அரசியல் சாசனத்தை மீட்டெடுக்க போவதாக காங்கிரஸ் கட்சி முழக்கமிட்டது. மேலும் ராகுல் காந்தி கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை அவ்வப்போது காட்சிப்படுத்தி ஆளுகின்ற பாஜக அரசியல் சாசனத்தை முடக்க நினைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முடிவில் பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது போது கூட காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பு சாசனம் குறித்து பாஜக மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் காங்கிரஸின் இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய அவசர நிலை தான் இந்தியாவின் கருப்பு தினம், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் சாசனம் குறித்து, ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தது.

இந்த நிலையில் காங்கிரஸுக்கு மேலும் ஒரு பதிலடி கொடுக்கும் விதமாக இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emergency june 25 Congress vs BJP Govt


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->