அதிகாலையிலே பரபரப்பு! சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மற்றும் குடும்பத்தினருக்கு எதிராகநில முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ளது. மைசூரு நகர மேம்பாட்டு கழகம் (MUDA) சித்தராமையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக மாற்று நிலத்தை ஒதுக்கியது.

இருப்பினும், மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு முன்னதாகக் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட மிக அதிகமாக இருந்ததால், இது முறைகேடு எனக் கருதி சித்தராமையா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் முதலில் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மூத்த மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, இளைய மைத்துனர் தேவராஜ் ஆகியோர் குற்றவாளிகளாக சாட்டப்பட்டுள்ளனர். கடந்த வாரம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சித்தராமையாவின் மைத்துனர் தேவராஜின் மைசூரு வீட்டில் சோதனை நடத்தினர். இதேபோல், சனிக்கிழமை லோக் ஆயுக்தா போலீசார் பார்வதியை விசாரித்து, மூன்று மணி நேரத்திற்கு மேல் அவரிடம் கேள்விகளைக் கேட்டனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு ஆகிய நகரங்களில் சுமார் 15 இடங்களில் சோதனைகள் நடத்தினர். சுமார் 70 அதிகாரிகள் ஒன்றாக இணைந்து ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மைசூரு நகர மேம்பாட்டு கழகத்தில் நில ஒதுக்கீடு, வீட்டு மனை விற்பனை மற்றும் கட்டுமான ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் கர்நாடக ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரத்தி சுரேஷும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார். அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement department raided 15 places including Bengaluru Mysuru in land misappropriation case against Siddaramaiah


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->