குஜராத்தில் 2000 ரூபாய் நோட்டுகளாக சிக்கிய ஒரு கோடி பணம்.!
enforcement department seized one crores money in gujart
குஜராத்தில் 2000 ரூபாய் நோட்டுகளாக சிக்கிய ஒரு கோடி பணம்.!
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் ஜக்குபாய் படேல் என்பவர் தனது கூட்டாளிகளான கேதன் படேல், விபுல் படேல், மிட்டன் படேல் உள்ளிட்டோருடன் கடந்த 2018-ம் ஆண்டு டாமனில் நடைபெற்ற ஒரு இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளார்.
இவர்கள் மீது டாமன் யூனியன் பிரதேசம், குஜராத்தின் வல்சாத், மும்பை உள்ளிட்ட பல ஊர்களில், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, மதுபான கடத்தல் உள்பட 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதில் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை டாமன், குஜராத் மாநிலத்தின் வல்சாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் சுரேஷ் ஜக்குபாய் படேல் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களில் சோதனை நடத்தியது.
அந்த சோதனையில், வங்கி கணக்குகளில் ரூ.நூறு கோடி வரவும், ரூ.1 கோடி 62 லட்சம் வெறும் 2,000 ரூபாய் நோட்டுகளாக சிக்கியது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி நாட்டில் 2,000 ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சோதனையில், நூறுக்கு மேற்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்கள், பண பரிமாற்ற ஆவணங்கள், 3 வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் குற்றச்செயல்களில் கிடைத்த பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக, அவர்கள் போலியாக நிறுவனங்களை தொடங்கியதும் தெரிய வந்தது.
English Summary
enforcement department seized one crores money in gujart