திடீர் சோதனை!!!சத்தீஸ்கர் முன்னாள் மந்திரி மகன் வீட்டில் அமலாக்கத்துறையினர்...! மதுபான ஊழல் குற்றச்சாட்டு...
Enforcement officers sudden raid at the house of former Chhattisgarh minister's son for Liquor scam allegations
கடந்த 2019 - 2022 ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநில ராய்ப்பூரில்,காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகல் இருந்தபோது மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் மதுபானங்களை சட்ட விரோதமாக விநியோகித்து சுமார் ரூ.2,100 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள்விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல்:
இந்நிலையில், இன்று மதுபான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் மகன் சைதன்யா பாகல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.இதற்காக இன்று அதிகாலையே அமலாக்கத்துறை அதிகாரிகள் பிலாய், பத்மநகரில் உள்ள சைதன்யா பாகல் வீட்டிற்குள் நுழைந்தனர்.
உடனடியாக சோதனை நடந்த போது வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.இதேபோல் ஒரே நேரத்தில் இன்று சத்தீஸ்கரில் மொத்தம் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.சைதன்யா பாகல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் அவருக்கு விவசாயத்திலும் ஆர்வமுள்ளது.
இதில் அவருக்கு 3 வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி கியாதியும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவராவார்.இந்த சோதனையின் மூலம் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மீதான சந்தேகம் அதிகரித்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளன.மேலும் இது தொடர்பான விசாரணையை அதிசாகரிகள் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றதாக தெரிகிறது.
English Summary
Enforcement officers sudden raid at the house of former Chhattisgarh minister's son for Liquor scam allegations