அனைத்து அமர்வுகளும் தினமும் 10 மனுக்களை விசாரணை செய்ய வேண்டும் - தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்.!
every day all hearing ten pettitions investigations in supreme court
உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக இருந்தவர் யுயு லலித். இவரின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார்.
இவர் தனது பணியை தொடங்கிய முதல் நாளிலே வழக்குகளை பட்டியலிடுவதற்கு புதிய நடைமுறையை பின்பற்றுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி, உச்சநீதிமன்றத்தில், திங்கள், செவ்வாய், புதன் உள்ளிட்ட கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும், அடுத்த வாரம் திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
மேலும், அவரசமான வழக்குகளாக இருந்தால் அதற்கான விசாரணையை நாங்கள் குறிப்பிடுவோம், பிற வழக்குகள் அனைத்தும் குறிப்பிட்ட படி பட்டியலிடப்படும். இதுகுறித்து, நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்ற அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த அறிவுறுத்தலில், உயர்நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்படும் மனுக்கள் மற்றும் ஜாமீன் கோரிக்கைகள் என்று தினமும் பத்து வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் விசாரணை செய்ய வேண்டும்.
தற்போது இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் மனுக்கள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளதால், இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
every day all hearing ten pettitions investigations in supreme court