தோல்நோய் பரவல் : தடுப்பூசி போடுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் குமாரசாமி வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சரான குமாரசாமி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளில் பசு மாடுகள் தோல் நோயால் பாதிக்கப்பட்டும், சில இடங்களில் அந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் இறந்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. 

இதன் காரணமாக விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இங்கு இறக்கும் மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்ய கூட டாக்டர்கள் இல்லாத சூழல் உள்ளது. இந்த தோல் நோயால் இறக்கும் மாடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. 

ஆனால், விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் போதாது. தோல் நோயால் இறக்கும் மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவேன். 

இந்த தோல் நோய் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி போட அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு விரைந்து செயல்படாமல் நேரத்தை செலவிடுகிறது" என்று முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex chief minister kumarasamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->