பா.ஜ.கவில் இணைந்த மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர்! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் தற்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். 

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் ராம் கோபால் மற்றும் முன்னாள் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் இருவரும் இன்று பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஜெய்ப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளனர். 

இவர்களை வரவேற்று பேசிய சி.பி. ஜோஷி, ''பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததற்கு நன்றி. 

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்'' என தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அசோக் தன்பார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்னா பாரத் மோர்ச்சா என்ற கட்சியை உருவாக்கினார். 

அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வருகின்ற 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex Congress leader joined BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->