"பாரதம்" என்ற பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை - வெங்கய்யா நாயுடு பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


"பாரதம்" என்ற பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை - வெங்கய்யா நாயுடு பரபரப்பு பேட்டி.!

ஜி-20 மாநாட்டிற்காக தயார் செய்யப்பட்ட அழைப்பிதழில் 'இந்தியா'வுக்கு பதில் 'பாரதம்' என்று குறிப்பிடப்பட்டு இருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெலுங்கனா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது:- "நாட்டில் அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். இதனால் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை உள்ளிட்ட இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

பழங்காலத்தில் இருந்தே நமது நாடு "பாரதம்" என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதனால், இது தொடர்பான சர்ச்சைகள் தேவை இல்லை. 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரதம்' என்ற பெயரைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது தொடர்பாக ஒரு முழுமையான அர்த்தமுள்ள விவாதம் நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex vice president vengaiya naidu support india name change bharat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->