புதுவையில் அதிரடி காட்டிய கலால் துறை - 14 ரெஸ்டோ பார்களுக்கு திடீர் சீல்..!!
Excise Department seel to 14 resto bar in puthuchery
அண்டை மாநிலமான புதுச்சேரியில் 202 ரெஸ்டோ பார்கள் உட்பட மொத்தம் 396 சில்லரை மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் இயங்குவதற்கு கலால் துறை சார்பில் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை உரிமம் வழங்கப்படுகிறது.
இந்த உரிமத்தை பெற ஒவ்வொரு மதுக்கடையும் ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த நிதி ஆண்டு ஆரம்பம் ஆவதற்குள் இந்தத் தொகையை செலுத்தி உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்த முள்ள 396 சில்லரை மதுபானக் கடைகளில் 381 கடைகள் உரிமத்தை புதுப்பித்தன. உரிமம் புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 மதுபான கடைகளுக்கு கலால் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கலால் உதவி ஆணையரின் உத்தரவின் படி தாசில்தார் ராஜேஸ்கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் உரிமத்தை புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர்.
சீல் வைக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் ரூ.6 லட்சத்துடன் 10 சதவீதம் அபராத கட்டணத்தையும் செலுத்தி உரிமத்தை புதுப்பித்த பின்னர் கடையைத் திறக்க அனுமதி வழங்கப்படும்.
English Summary
Excise Department seel to 14 resto bar in puthuchery