#BREAKING || பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!! மீட்பு பணிகள் தீவிரம்.!! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் தத்தாபுகூர் பகுதியில் சட்டவிரோதமாக இருந்த பட்டாசு ஆலையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு நிறைந்த பகுதியில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததால் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. அதில் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து விசாரணை செய்து வரும் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Explosion in West Bengal firecracker factory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->