மூட நம்பிக்கையால் பறிபோன குழந்தையின் கண் - ம.பியில் சோகம்.! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்குமுன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அழுதுகொண்டே இருந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மாந்திரீகரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய தம்பதி, குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை வெளியேற்றுமாறு மாந்திரீகனிடம் தெரிவித்துள்ளனர். அதன் படி அவர் நேற்று முன் தினம் வீட்டில் செங்கல்களை அடுக்கிவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ வைத்து, பெற்றோர் கண் எதிரே அந்த தீயின் முன் பச்சிளம் குழந்தையை கட்டி தொங்க விட்டுள்ளார்.

அந்தக் குழந்தை தீயின் வெப்பம் தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளது. இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தையின் கண் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, பெற்றோர் குழந்தையை நேற்று சிவ்புரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களிடம் மருத்துவர்கள் சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் மூடநம்பிக்கையில் குழந்தையை தீயின்முன்பு கட்டி தொங்கவிட்டதை கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eye problam to six month baby in madhyapradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->