கொரோனா பரவல் எதிரொலி.! திருநள்ளாறு கோவிலுக்கு வருபவர்களுக்கு... முககவசம் கட்டாயம்.! - Seithipunal
Seithipunal


காரைக்காலில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,998ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, காரைக்கால் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Face mask is mandatory for coming to Tirunallaru temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->