சண்டையில் பல்லால் கடித்த நாத்தனார்! மனித பல் ஆயுதமில்லை - நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!
family attack mumbai court case judgement
மனித பற்கள் பெரும் ஆபத்து தரும் ஆயுதங்களாக கருத முடியாது எனக் கூறி, ஒருவரின் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-யை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சொத்து தகராறு காரணமாக மும்பையில் ஒரு பெண்ணுக்கும், அவரின் நாத்தனாராகிய கணவரின் தங்கைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சண்டைக்கு மாறிய இந்த நிலைமைக்கிடையில், நாத்தனார் தனது அண்ணியை கடித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 - "பயங்கர ஆயுதம் மூலம் காயம் விளைவித்தல்" என்றக் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
இதற்கு எதிராக நாத்தனார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் விபா கண்கண்வாடி மற்றும் சஞ்சய் தேஷ்முக், “மனித பற்கள் இயற்கையாகவே உடலின் ஒரு பகுதியாகும். அவை பெரும் தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களாக வரையறுக்க முடியாது” என தெரிவித்தனர்.
மேலும், மருத்துவ சான்றிதழில் சிறிய பற்கள் தடம் மட்டுமே உள்ளதையும், இதனால் ஏற்பட்ட காயம் லேசானதென்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், விசாரணையை தொடர்வது சட்டத்தின் தவறான பயன்பாடாகும் எனக் கூறி, நீதிமன்றம் எஃப்.ஐ.ஆர்.-யை ரத்து செய்து உத்தரவிட்டது.
English Summary
family attack mumbai court case judgement