காருக்குள் பிணமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


கேரளா, கோட்டையம் மாவட்டத்தில் உள்ள ஒரு பூங்கா அருகே கார் ஒன்று நீண்ட நேரம் ஆக நின்று கொண்டிருந்தது. அந்த கார் கண்ணாடிகள் அனைத்தும் முழுமையாக ஏற்றப்பட்டிருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பதை பூங்காவிற்கு சென்றவர்கள் பார்த்துள்ளனர். 

நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் காரிலிருந்து இறங்காததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை தட்டி பார்த்தனர். ஆனால் உள்ளே இருந்தவர் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் ஒரு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது காருக்குள் இருந்தவர் உணர்வற்ற நிலையில் காணப்பட்டார். 

உடனடியாக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது காருக்குள் பிணமாக கிடந்தவர் பிரபல நடிகர் வினோத் தாமஸ் என்பது தெரியவந்தது. 

இவர் 'அய்யப்பனும் கோஷியும்' என்ற திரைப்படத்தின் மூலம் கேரளாவில் பிரபலமானவர். இவர் எப்படி இறந்தார் என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரளாவில் பிரபல நடிகர் ஒருவர் காருக்குள் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actor found dead in car Kerala police investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->