பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் பிரபல நடிகை? - Seithipunal
Seithipunal


நடிகை விஜயசாந்தி, தெலுங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி முதல் முறையாக கடந்த 1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கி பா.ஜ.க மகளிர் அணி செயலாளர் போன்ற பல்வேறு பதவிகளிலும் இருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகை விஜயசாந்தி, பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு மாறி கடந்த 2020 ஆம் ஆண்டு மீண்டும் தாய் கட்சியான பா.ஜ.காவில் இணைந்தார். 

இந்நிலையில் அடுத்த மாதம் தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயசாந்திக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பதால் அவர் பா.ஜ.கவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. 

இதற்கிடையே நடிகை விஜயசாந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தெலுங்கானா மக்களை பாரதிய ராஷ்டிர சமிதி இடம் இருந்து காங்கிரஸ்தான் காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவின் மூலம் விஜயசாந்தி பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரசில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress Bharathiar Janata Party quits joins Congress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->