படபிடிப்பு தளத்தில் பிரபல இளம் நடிகை தற்கொலை..!!
Famous actress committed suicide on shooting spot
பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா ஷர்மா. இவர் அலிபாபா தாஸ்தென்-இ-காபூல் என்ற தொடரில் துனிஷா ஷர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். நேற்று மும்பையின் வசாய் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடும் வீடியோவை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். பிறகு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மேக்கப் அறைக்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது இருப்பினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடிகை துனிஷா ஷர்மா வரும் ஜனவரி 4-ம் தேதி தனது 21 வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் படபிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் ஃபிதூர் மற்றும் பார் பார் தேக்கோ ஆகிய இரண்டு படங்களில் இளம் காத்ரீனா கைஃப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Famous actress committed suicide on shooting spot